Thursday, February 4, 2010

MEDICINE = மருத்துவ இயல்

abdomen = வயிறு

abdominal gas = வயிற்று வாயு

aberrant condition = பிறழ் நிலைமை

abnormal condition = வழமைக்கு மாறான நிலைமை

abortion = கருச்சிதைப்பு

abrasion = சிராய்ப்பு = பிறாண்டல் = தோற்காயம்

abscess = தொப்பளம் = சீழ்க்கட்டு

absorption = அகத்துறிஞ்சல்

abstinence from substances = வெறியப்பொருள் விலக்கு

acidity = அமிலத்தன்மை

acupuncture = ஊசிவைத்தியம்                 

acute care = தீவிர பராமரிப்பு
addictive drug (substance) =
அடிமைப்படுத்தும் போதைப்பொருள்

addiction to drugs = போதைப்பொருட்களுக்கு அடிமைப்படுதல்

adhesive bandage = ஒட்டுப் பந்தனம்
adverse reaction =
தகாத விளைவு
aftercare =
பின்பராமரிப்பு
AIDS = acquired immune deficiency syndrome =
தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணி

adsorption = புறத்துறிஞ்சல்

aetiology = நோயேதியல்
acquired disease =  தேடிய நோய்

air ambulance = நோயாளர் வானூர்தி
albinism =
வெண்சோகை

alcohol abuse = மட்டுமீறிய மதுநுகர்வு

alcoholism = மதுநுகர்வுக்கு அடிமைப்படுகை

alimentary canal = உணவுக் குழாய்

allergy = ஒவ்வாமை

allopathy = எதிரீட்டு மருத்துவம்

alternate level of care = மாற்றுப் பராமரிப்பு மட்டம்
alternative medicine =
மாற்று மருந்து
Alzheimer's disease =
மூளையசதி நோய்
ambulance =
நோயாளர் ஊர்தி
ambulation =
நடமாட்டம்
ambulatory patient =
நடமாடும் நோயாளி

amenorrhoea = மாதவிடாயின்மை
amnesia =
நினைவிழப்பு

amputation = உறுப்பகற்றல்

anaemia = சோகை

anaesthesia = உணர்வீனம்

anaesthetic = உணர்வீன மருந்து

anal examination = குதவழிப் பரிசோதனை

aneurysm = குருதிக்கலப் புடைப்பு

angina pectoris = நெஞ்சுத் தெண்டல்

angioplasty = குருதிக்கல அடைப்பெடுப்பு

anomaly = இயல்பீனம்

antibiotics = கிருமியொடுக்கி

antibody = நஞ்சொடுக்கி

anticoagulant = குருதித்திரளொடுக்கி

antidote = எதிர்ப்பு மருந்து = நச்சிளக்கி

antigen = காப்பணுவூட்டி

antiseptic = ஊழ்த்தலொடுக்கி

anus = குதம்

anxiety disorder = பதற்றக் குழப்பம்

apathy = அசண்டை

appetite = பசிநாட்டம்

aromatherapy = நறுமருந்துச் சிகிச்சை

artery = நாடி

arthritis = மூட்டுவாதம்

artificial insemination = செயற்கை விந்தீடு
auditory test = hearing test =
செவிப்புல பரிசோதனை

atherosclerosis = நாடி-உட்படிவு

Ayurveda = ஆயுள்வேதம்

back pain = முதுகு வலி

bacteria = பற்றுயிரிகள்

bactericide = பற்றுயிரியொடுக்கி

bacteriology = பற்றுயிரியல்

bacterium = பற்றுயிரி

balanitis = ஆண்குறிமுனை வீக்கம்

baldness = வழுக்கை

behaviour modification therapy = நடத்தை மாற்றச் சிகிச்சை

behaviour therapy = நடத்தைச் சிகிச்சை

benign tumour = கெடுதிகுறைந்த கழலை
bile =
பித்தம்

biliary disease = பித்த நோய்

bioethics = உயிரியல்நெறியியல்

biological reasons = உயிரியற் காரணங்கள்

biopsy = இழைய சோதனை

bipolar disorder = இருமனக் குழப்பம் = மந்த-பித்தக் குழப்பம்
birthing room =
மகப்பேற்றுக் கூடம்
blended family =
பலதாரப் பிள்ளைகள் கொண்ட குடும்பம்
blood cell =
குருதிக் கலம்
blood donor clinic =
குருதிக் கொடைக் களம்
blood platelet =
குருதிச் சிறுதட்டு

blood coagulation = குருதித் திரள்வு

blood pressure cuff = குருதி அழுத்தக் கைப்பட்டி
blood transfusion =
குருதி ஏற்றல்
blood typing =
குருதி வகையீடு
blood volume =
குருதிக் கனவளவு
body fluid =
உடற் பாய்மம்
body image =
உடற் படிமம்
body mass index =
உடற் திணிவுச் சுட்டு
bone graft =
என்பு ஒட்டு
bone loss =
என்பிழப்பு

bone marrow = என்பு மச்சை
bone mineral =
என்புக் கனியம்

bowel movement = மலங்கழிப்பு

brainstem = மூளைத்தண்டு
breast-conserving therapy =
மார்பகம் பேணு சிகிச்சை

bronchi = bronchial tubes = கிளைமூச்சுக்குழாய்கள்

bronchitis = மார்புச்சளி
bruise = contusion =
கன்றல்
bypass surgery =
மாற்றுப் பொருத்துச் சிகிச்சை

bronchus = bronchial tube = கிளைமூச்சுக்குழாய்

cardiac arrest = இதயத்துடிப்பு நிறுத்தம் = இதயத்துடிப்பொழிவு

cardiac life support = இதய இயக்கத் துணை

cardiopulmonary resuscitation = இதயசுவாசமூட்டல்
care-giver =
பராமரிப்பாளர்

case history = நோயாளர் வரலாறு

CAT scan = CT scan = Computerized Axial Tomography = உள்ளுறுப்பு வெட்டுமுக கதிர்ப்படப்பதிவு 

cataract = பசாடு = விழிவில்லைப் படலம்

catarrh = பீனிசம்

celiac disease = குளூட்டன் ஒவ்வாமை

central nervous system = மைய நரம்புத் தொகுதி

cerebral aneurysm = மூளைக்குருதிக்கலன் புடைப்பு
embolic cerebrovascular accident =
மூளைக்குருதிக்கலன் அடைப்பு
cervical cancer = கருப்பைமுகைப் புற்றுநோய்

change (changing) room = உடைமாற்று கூடம்

charge nurse = nurse-in-charge = பொறுப்புத் தாதியாளர்

chest pain = நெஞ்சுவலி

chickenpox = பொக்குளிப்பான்

chiropody = podiatry = பாத மருத்துவம்

chiropractic = மூட்டு-கையாள்கைச் சிகிச்சை

chronic disease = நீடித்த நோய்

clinic = சிகிச்சையகம்

clinician = சிகிச்சைப் பொறுப்பு மருத்துவர்

coagulation = திரள்வு

cognitive impairment = புரிவுத் தடங்கல்

colon = பெருங்குடல்

communication skills = தொடர்பாடல் திறன்கள்

community health = சமூக சுகாதாரம்

compassionate care = கருணைகூர் பராமரிப்பு

complementary medicine = குறைநிரப்பு மருத்துவம்

congenital disease = பிறவி நோய்

constipation = மலச்சிக்கல்

contusion = bruise = கன்றல்

convulsion = வலிப்பு

coronary artery = இதய நாடி = முடியுரு நாடி

coronary bypass = இதய மாற்றுப்பொருத்து

coronary thrombosis = இதயநாடிக் குருதியுறைவு = முடியுருநாடிக் குருதியுறைவு

craniosacral therapy = தலை-கையாள்கைச் சிகிச்சை

crib death = sudden infant death = தொட்டிற் சிசு இறப்பு = சிசு திடீர் இறப்பு

crisis counselling = நெருக்கடிகால மதிவளத்துணை

crisis management = நெருக்கடி கையாள்கை

critical care = intensive care = தீவிர பராமரிப்பு

critical care nursing = தீவிர பராமரிப்புத் தாதிமை

date rape = உடன்போக்கு வன்புணர்ச்சி

debriefing team = விபரம் வினவும் அணி

deep vein thrombosis = ஆழ்நாளக் குருதியடைப்பு

degeneration = சிதைவு

dehydration = வறள்வு

delirium = சன்னி

dementia = அசதிக் கோளாறு

density = அடர்த்தி

dental floss = பல்லிடுக்கு-நூல்

dental tape = பல் நாடா

dental-filling = பற்குழி நிரப்பல்

denture therapist = செயற்கைப்பற் சிகிச்சையாளர்

denturist = செயற்கைப்பல் ஆக்குநர்

depression = மந்தம் = உளச்சோர்வு

dermatitis = தோலழற்சி

developmental disability = விருத்தி வலுவீனம்

diabetes = நீரிழிவு

diagnosis = நோயறிகை

diagnostic testing = நோயறி சோதனை

dialysis = haemodialysis =குருதி சுத்திகரிப்பு

diet = (1) உணவு (2) பத்தியம்

dietician = உணவியலர்

diplopia = இரட்டைப் பார்வை

disability = வலுவீனம்

disruptive behaviour = சீர்குலைப்பு நடத்தை

diuresis = சிறுநீர்ப்பெருக்கு

Down Syndrome = Down's Syndrome = டவுண் பிணிக்கூட்டு = உளமுடக்கப் பிணிக்கூட்டு   

drug dependency = போதைப்பொருள் நுகர்வில் தங்கியிருப்பு

drug of choice = தெரிவு மருந்து

drug profile = medication profile = மருந்து விபரம்

dry skin = உலர் தோல் = வரள் தோல்

early detection = வேளைக்கே கண்டறிதல்

earwax = காதுக்குரும்பி

echocardiogram = இதய எதிரொலிப் படம்

emergency medical attendant = அவசர மருத்துவ பணிவிடையாளர்

emphysema = நுரையீரல் வளிப்பை வீக்கம்

enteritis = சிறுகுடல் அழற்சி

epilepsy = காக்கை வலி

erectile dysfunction = ஆண்குறி ஓங்கல் பிசகு

essential amino acids = அத்தியாவசிய அமினோ அமிலங்கள்

essential oil = சாரம்

excreta = உடற்கழிவுகள்

exfoliation = உதிர்வு

experimental vaccine = பரீட்சார்த்த தடுப்புமருந்து

extended care = நீடித்த பராமரிப்பு

face-lift = முக ஒப்பனை

failure to thrive = தேறத் தவறல்

fallen bladder = சிறுநீர்ப்பை இறக்கம்

family constellation = குடும்பக் குழுமம்

fatality rate = இறப்பு வீதம்

fatigue = அயர்ச்சி

fatty acid = கொழுப்பு அமிலம்

fecal impaction = மலக்கட்டு

femoral artery = தொடை நாடி

fetal death rate = சிசு இறப்பு வீதம்

fibre = நார்

fibromyalgia = இழையவாதம்

fit = வலிப்பு

fitness = உடலுறுதி

flatulence = குடல்வாய்வு

flower essence = பூச்சாரம்

fluid = பாய்மம்

fluid retention = oedema = நீர்ப்பிடிப்பு

fracture = முறிவு

gallstone = பித்தப்பைக் கல்

gene = பரம்பரையலகு = மரபணு

general medical practitioner = பொது மருத்துவம் புரியுநர்

generic drug = வர்க்க மருந்து

genetic disease = பரம்பரையலகு நோய் = மரபணு நோய்

geriatrics = முதுமை மருத்துவம்

germ = கிருமி

glaucoma = விழிபொன்றல்

gout = கீல்வாதம்

graft = ஒட்டு

gum disease = முரசு நோய்

haemodialysis = dialysis = குருதி சுத்திகரிப்பு

haemorrhagic cerebrovascular accident = மூளைக்குருதிக்கலன் வெடிப்பு 

haemorrhoid = hemorrhoid = piles = மூலநோய்

hair loss = முடி உதிர்வு

health = நலவாழ்வு = சுகாதாரம் = உடல்நலம்

health care = சுகாதார பராமரிப்பு

hearing aid = செவித்துணை

hearing loss = செவிப்புலன் இழப்பு

hearing test = auditory test = செவிப்புல பரிசோதனை

heart palpitation = இதயப் படபடப்பு

heartburn = pyrosis = நெஞ்செரிவு

heat stroke = வெப்ப அயர்ச்சி

hemiplegia = பக்கவாதம்

herbal medicine = மூலிகை மருத்துவம்

hereditary disease = பரம்பரை நோய்

herpes = கிரந்தி

high blood pressure = hypertesnsion = உயர் குருதி அமுக்கம்

hip fracture = இடுப்பு முறிவு

HIV = Human Immunodeficiency Virus = மனித தடுப்புவலு தேய்வு நுணங்கி

holistic medicine = முழுமை மருத்துவம்

homeopathy = உள்ளீட்டு மருத்துவம்

hospice = அந்திம பராமரிப்பகம்

hydrotherapy = நீர்ச்சிகிச்சை

hygiene = சுகாதாரவியல்

hypertension = high blood pressure = உயர் குருதி அமுக்கம்

hyperthermia = மிகையுடற்சூடு

hypertrophy = மிகைவளர்ச்சி

hypnotherapy = உளவசிய சிகிச்சை

hypotension = தாழ் குருதி அமுக்கம்

image = படிமம்

immunization = தடுப்புமருந்தீடு

immunology = நோய்த்தடுப்பியல்

implant = உட்பதி

impotence = ஆண்மையீனம்

incontinence = ஒழுக்கு

indigestion = சமியாப்பாடு = செரிக்காமை

influenza = சளிக்காய்ச்சல்

informed choice = விபரமறிந்து ஏற்கும் தெரிவு

informed consent = விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

injected medication = ஊசி மருந்தேற்றம்

injury severity indicator = காயக்கடுமை காட்டி

insomnia = உறக்கமின்மை

intern =  உள்ளகப் பயிலுநர்

internship = உள்ளகப் பயிற்சி

intravenous injection = நாள ஊசியேற்றம் 

intrusive procedure = ஊடுருவு சிகிச்சை

invasive surgery = ஊடறுவைச் சிகிச்சை        

iron deficiency = இரும்புச்சத்துக் குறைபாடு 

irritable bowel syndrome = குடற் பதற்றப் பிணிக்கூட்டு

ischemia = உறுப்புக் குருதிக் குறைபாடு 

IVF = in vitro fertilization = புறகருக்கட்டல்

kidney stone = சிறுநீரகக் கல்

laxative = மலமிளக்கி

LBW= low birth weight = எடை குறைந்த பிறப்பு 

licensed nurse = உரிமத் தாதியாளர்

life-style change = வாழ் பாங்கு மாற்றம்

liver disease = ஈரல் நோய்

lungs = நுரையீரல்

macular degeneration = விழிப்புள்ளிச் சிதைவு

malignant tumour = கெடுதிமிகுந்த கழலை

manic and depressive episodes = பித்து-மந்தக் கட்டங்கள் 

manic-depression = பித்து-மந்தம்

manic-depressive psychosis = பித்து-மந்த உளநோய்

manipulative skill = கையாள்கைத் திறன்        

manual skill = கைத் திறன்      

marrow = மச்சை
mass =
திணிவு

meals on wheels = கொண்டுசென்று வழங்கும் உணவு 

medical history = நோய் வரலாறு

medical record = மருத்துவப் பதிவேடு

meditation = தியானம்

membrane = சவ்வு

memory loss = மறதி

meningitis = மூளைக்காய்ச்சல்

menopause = மாதவிடாயொழிவு

menorrhagia = மாதவிடாய்க் குருதிப்போக்கு

mental health = உளநலம்

mentally disabled person = உளவலுவீனர்

metabolic syndrome = அனுசேபப் பிணி

metrorrhagia = பெரும்பாடு      

miction = urination = சிறுநீர் கழிப்பு

midstream specimen = இடைநடுச் சிறுநீர் மாதிரிக்கூறு

midstream test =  இடைநடுச் சிறுநீர்ச் சோதனை 

midwife = மகப்பேற்றுத் தாதியாளர்               

midwifery = மகப்பேற்றுத் தாதிமை 

miscarriage = கருச்சிதைவு

mixed bipolar disorder = இருமனக் கலப்புக் குழப்பம்

mobility impaired person = நடமாட்டம் குன்றிய ஆள்

mortality rate = இறப்பு வீதம்

muscle cramp = தசைநார்ப் பிடிப்பு

muscular dystrophy = தசைநார்த் தேய்வு

nail fungus = நகக் குட்டை

narcotic = போதைமருந்து

naturopathy = இயற்கைச் சிகிச்சை

nausea = குமட்டல்

neonatal care = சிசு-பராமரிப்பு

nerve = நரம்பு

nervous system = நரம்பு மண்டலம்

neuroanatomy = நரம்பமைப்பியல்

neurobiology = நரம்புயிரியல்

neurology = நரம்பியல்

neuropathology = நரம்புநோயியல்

neuropathy = நரம்புநோய்

neurophysiology = நரம்புத்தொழிற்பாட்டியல்

neuropsychology = நரம்புளவியல்

neuroscience = நரம்பறிவியல்

neurosurgery = நரம்பறுவைச் சிகிச்சை

night blindness = மாலைக் கண் 

nurse = தாதியாளர்

nurse consultant = nursing consultant = தாதிமை உசாவலர்

nursing home residential care = வதிவுத் தாதிமைப் பராமரிப்பு 

nutrition = சத்துணவு

nutritional supplements = நிரவல் சத்துணவு வகைகள்

obesity = உடற்பருமன்

oedema = fluid retention = நீர்ப்பிடிப்பு

oncology = புற்றுநோயியல்    

oral contraceptive = கருத்தடை மாத்திரை

organism = அங்கி

osteoarthritis = என்புமூட்டுவாதம்

osteoporosis = என்புப்போறை

outreach worker = வெளிக்களப் பணியாளர்

overactive bladder = சிறுநீர்ப்பை பதற்றம்

panic = பீதி

pap test = கருப்பைமுகைப் பரிசோதனை

paralysis = பக்கவாதம் 

paramedic = உபசிகிச்சையாளர்          

Parkinson's disease = உடல்-தளர்ச்சி நோய்

pedal artery = பாத நாடி 

pedal pulse = பாத நாடித் துடிப்பு  

pelvic examination = இடுப்பகப் பரிசோதனை

pelvic inflammatory disease = இடுப்பக அழற்சி நோய்  

penile disease = ஆண்குறி நோய்

periodontal disease = பல்-முரசு நோய்            

periodontal physiology = பல்-முரசுத் தொழிற்பாடு

peripheral neuropathy = சுற்றயல் நரம்புப் பீடை

pharmaceutical manufacturer = மருந்துவகை உற்பத்தியாளர்

pharmacist = மருந்தீட்டாளர்   

pharmacy = மருந்தீட்டகம்

physically disabled person = உடல் வலுவீனர்

physician-assisted suicide = வைத்தியர் துணையுடன் தற்கொலை

physiotherapy = உடற்பயிற்சிச் சிகிச்சை 

platelet = குருதிச்சிறுதட்டு
blood pressure =
குருதி அழுத்தம்
pressure =
அழுத்தம் = அமுக்கம்

PMS = Pre Menstrual Syndrome = மாதவிடாய்க்கு முந்திய பிணி 

podiatrist = பாதமருத்துவர்

podiatry = chiropody = பாத மருத்துவம்

poison = நஞ்சு

postpartum depression =  postnatal depression = மகப்பேறடுத்த மந்தம்

post-traumatic stress = ஊறடுத்த உளவழுத்தம்  

prenatal care = antenatal care = மகப்பேற்றுக்கு முந்திய பராமரிப்பு

prescribing physician = மருந்து நிர்ணயித்த மருத்துவர் 

prescription drug =  நிர்ணய மருந்து   

primary care = ஆரம்ப பராமரிப்பு 

private room = தனி அறை 

professional service = துறைமைச் சேவை 

prostate = முன்னிலைச் சுரப்பி

protein = புரதம்

psychiatry = உளமருத்துவம்

psychology = உளவியல்

public health = பொது சுகாதாரம் 

pulse rate = நாடித் துடிப்பு வேகம்

puncture = துளை

pyrosis = heartburn = நெஞ்செரிவு

qigong = உடல்வினைச் சிகிச்சை

radiation = கதிர்வீச்சு

radioactivity = கதிரியக்கம்

radiology = கதிரியல்

rape = வன்புணர்ச்சி = வல்லுறவு

rash = பரு

rectal examination = நேர்குடற் பரிசோதனை

rectum = குதம்

referral  recommandation = தொடர்பீட்டு விதப்புரை 

referral centre = தொடர்பீட்டு நிலையம் 

referring physician = தொடர்புபடுத்தும் வைத்தியர்

reflexology = தெறிவினையியல்

regimen = விதிமுறை

registered nurse = பதிவுபெற்ற தாதியாளர் 

rehabilitation = மறுவாழ்வு  

reiki = தொடுகைப் பரிகாரம்

residential care = வதிவுப் பராமரிப்பு  

respiratory therapist = சுவாச சிகிச்சை

rheumatoid arthritis = வாத மூட்டழற்சி

rolfing = ஊன்றி உருவுகை

root canal treatment = பல்-வேர்க்குழிச் சிகிச்சை 

rosacea = நுண்குருதிக்கலன் புடைப்பு

same-day surgery = ஒரேநாள் அறுவைச் சிகிச்சை 

sample drop-off = மாதிரிக்கூறு இட்டுச்செல்கை

scanning = சோதித்தல்  

sclerosis = இழையவன்மை

second-hand smoke = பிறர் புகை  

second-hand smoking = பிறர் புகை உள்வாங்கல் 

seizure = வலி

self-care = தன் பராமரிப்பு = சுய பராமரிப்பு 

self-discharge = தன் விருப்ப வெளியேற்றம் = தான் விரும்பி வெளியேறல்  

self-harm = தன்தீங்கு

self-help = தன்னுதவி

self-help group = தன்னுதவிக் குழுமம்

self-injury = self-mutilation = தன்னூறு

self-medication = தன்மருந்தீடு            

septic wound = ஊழ்த்த காயம்

sexual dysfunction = புணர்ச்சிப் பிசகு

sexually transmitted disease = புணர்ச்சி கடத்து நோய்

shiatsu = கையழுத்த சிகிச்சை

Siddha Medicine = சித்த வைத்தியம்

sleep apnea = உறக்க மூச்சிடைநிற்பு

snake venom = பாம்பு நஞ்சு

snore = குறட்டை

soft drink = மென்பானம்

spasm = துடிப்பு

sprain = சுளுக்கு

stiff neck = கழுத்துப் பிடிப்பு

stomach = வயிறு

stool softener = மலமிளக்கி

stress = உளவழுத்தம்

stretching = நெட்டிமுறித்தல்

stroke = பாரிசவாதம்

substance abuse = drug abuse = மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு   

supplementary medicine = மேலதிக மருந்து

support group = ஆதரவுக் குழுமம்

surrogacy contract = பதிலி ஒப்பந்தம்

surrogate mother = பதிலித் தாய்

surrogate motherhood = பதிலித் தாய்மை

survivor = மீந்தார்

team = அணி

therapeutic massage = சிகிச்சைமுறை உருவுகை

therapeutic touch =  சிகிச்சைமுறைத் தொடுகை

therapy = சிகிச்சை

thrombosis = குருதியடைப்பு

thyroid gland = கேடயச் சுரப்பி

tinnitus = காதிரைச்சல்

tissue = இழையம்

torticollis = கழுத்துத் திருப்பம்

toxin = நஞ்சம்

trauma = (1) ஊறு = புண்பாடு (2) ஊறுபட்ட அதிர்ச்சி = புண்பட்ட அதிர்ச்சி (3) உளவூறு (4) உடலூறு

traumatic experience = அதிர்ச்சி அனுபவம்

typing = வகையீடு

ulcerative colitis = பெருங்குடல் அழற்சி உள்ளுறைப் புண்பாடு

ultrasound examination = அதீத ஒலிப்படப் பரிசோதனை

underlying illness = உள்ளார்ந்த சுகயீனம்

urinalysis = சிறுநீர்ப் பகுப்பு

uterine fibroid = கருப்பை இழையக் கழலை

uterine prolapse = கருப்பை இறக்கம்

vaccination = தடுப்பூசியேற்றம்

vaginal atrophy = யோனியுறை நலிவு

varicose vein = புடைநாளம்

vascular disease = குருதிக்கலன் நோய்

vasectomy = விந்துக்கான் அறுவை

vegetable oil =  தாவர எண்ணெய்

vegetarian diet = மரக்கறி உணவு = சைவ உணவு

vein = நாளம்

venomous snake = நச்சுப் பாம்பு

viral disease = நுணங்கி நோய்

virus = நுணங்கி

vitamin = உயிர்ச்சத்து

well-being = சுகசேமம்

wellness = உடல்நலம்

wrinkle = சுருக்கம்

yoga =  யோகாசனம்

Followers