ab intestato = விருப்பாவணமிடாது = உயிலிடாது
abandon a claim = கோரிக்கையைக் கைவிடு
abate rules = விதிகளைத் தணி
abduct = கடத்து
abide by the rules = விதிகளுக்கு அமைந்தொழுகு
abjure = சத்தியஞ்செய்து துற
above suspicion = ஐயத்துக்கு அப்பாற்பட்ட
abscond = தலைமறைவாகு
absentee landlord = தலத்தில் இல்லாத ஆதன உடைமையாளர்
absolute (unconditional) discharge = முழு (நிபந்தனையற்ற) தண்டனைவிலக்கு
absolute liability = முழுப் பொறுப்பு
absolute proof = திட்டவட்டமான சான்று
absolve = (குற்றச்சாட்டிலிருந்து) விடுவி
abuse of process = படிமுறையைத் தவறாகப் பயன்படுத்தல்
accede to a request = வேண்டுகோளுக்கு இணங்கு
acceleration clause = விரைவுபடுத்தல் வாசகம்
accept a claim = கோரிக்கையை ஏற்றுக்கொள்
acceptable document = ஏற்கக்கூடிய ஆவணம்
acceptable documentation = ஏற்கக்கூடிய ஆவணங்கள்
acceptance after sight = கண்டபின் ஏற்றுக்கொள்ளல்
acceptance for honour = மதிப்புக்கு ஏற்றுக்கொள்ளல்
acceptance supra protest = எதிர்த்தும் ஏற்றுக்கொள்ளல்
accessory after the fact = குற்றம் புரியப்பட்ட பின் துணைநிற்பவர்
accessory before the fact = குற்றம் புரியப்பட முன் துணைநிற்பவர்
account for = விளக்கமளி
accused = குற்றஞ்சாட்டப்பட்டவர்
acquired property = தேடிய தேட்டம்
acquisition = தேட்டம்
acquit = விடுதலை செய்
acquittal = விடுதலை செய்கை
act of commission = புரிசெயல்
act of gross indecency = மிக இழிந்த செயல் = பேரிழிசெயல்
act of omission = செய்யாதொழிதல்
act of parliament = நாடாளுமன்றச் சட்டம்
act of violence = வன்செயல்
action = legal action = சட்ட நடவடிக்கை
actus reus = குற்றச் செய்கை
ad infinitum = என்றென்றும்
ad valorem = பெறுமதிப்படி
addenda = பிற்சேர்க்கைகள்
addendum = பிற்சேர்க்கை
adduce evidence = சான்று சமர்ப்பி
ademption = விருப்பாவண கொடைவிலக்கு
adjournment = ஒத்திவைப்பு
adjudication = தீர்ப்பீடு
adjudicator = தீர்ப்பாளர்
administrative law = நிருவாகச் சட்டம்
administrator = (1) நிருவாகி (2) உரிமைத்தத்துவகாரர்
admissibility hearing = அனுமதிப்பு விசாரணை
admissible evidence = அனுமதிக்கத்தக்க சான்று
admission of guilt = குற்ற ஒப்புதல்
adopted child = தத்தெடுத்த பிள்ளை
adoption = தத்தெடுப்பு
adoption of convenience = வசதிக்கான தத்தெடுப்பு
adoptive parent = தத்தெடுத்த பெற்றார்
adulterous intercourse = சோரப் புணர்ச்சி
adultery = சோரம்
adversarial system of justice = எதிர்வாத நீதி முறைமை
adversary = எதிர்வாதி
advocate = வழக்குரைஞர்
affidavit = சத்தியக் கடதாசி
affirmant = உறுதியுரைஞர்
affirmation = உறுதிமொழி
after sight = கண்டபின்
age of discretion = தற்றுணிபு வயது
aggravated assault = வலுத்த தாக்குதல் = நையப் புடைத்தல்
aggrieved party = இடருற்ற தரப்பு
agreement = உடன்படிக்கை
aid and abet = உதவியும் ஒத்தாசையும் புரி
alias = எனப்படும்
alibi = இடத்திலா வாதம்
alimony = பிரிமனைப்படி
allegation = குற்றச்சாட்டு
allow a claim = கோரிக்கையை அனுமதி
allow an appeal = மேன்முறையீட்டை அனுமதி
alternative dispute resolution = மாற்றுப் பிணக்குத் தீர்வு
alternatives to detention = தடுத்துவைப்புக்கு மாற்றுவழிகள்
ambiguity = இருபொருள்படுகை
ambiguous statement = இருபொருள்படும் கூற்று
ambivalence = இருமனப்போக்கு
ambivalent = இருமனப்போக்குடைய
amendment = திருத்தம்
amicable settlement = நட்பிணக்கம்
amicus curiae = friend of the court = மன்றின் நட்பாளர்
amnesty = மன்னிப்பு
animosity = பகைமை
annul = ஒழி
anonymous = பெயரறியப்படாத = அநாமதேய
ante nuptial settlement = மணமுன் இணக்கம்
appeal = (1) மேன்முறையிடு (2) மேன்முறையீடு
appear in court = நீதிமன்றில் வெளிப்படு (தோன்று)
appearance notice = வெளிப்படல் அறிவித்தல்
appearance of bias = பாரபட்சம் நிலவும் தோற்றப்பாடு
appellant = மேன்முறையீட்டாளர்
appellate court = மேன்முறையீட்டு நீதிமன்று
applicant = விண்ணப்பதாரி
apportionment = பங்கீடு
apprehend the suspect = சந்தேகநபரைப் பற்றிப்பிடி
appropriate action = ஏற்ற நடவடிக்கை
appropriate public funds = பொது நிதியைக் கையாடு
appurtenances = சேருமதி
arbitral tribunal = நடுத்தீர்ப்பு நியாயசபை
arbitration = நடுத்தீர்ப்பு
arbitrator = நடுத்தீர்ப்பாளர்
Are you guilty or not guilty ? = நீர் குற்றவாளியா, அல்லவா?
argue = வாதிடு
argument = வாதம்
arraignment = குற்றவினாத்தொடுப்பு
arrest = கைதுசெய்
arrest warrant = பிடியாணை
arson = தீவைப்பு
as of right = உரிமைப்படி
assailant = தாக்குநர்
assassination = படுகொலை
assault = தாக்கு(தல்)
assignment court = சாட்டுதல் நீதிமன்று
assize court = பருவ நீதிமன்று
asylum = தஞ்சம்
at (the) bar = நீதிமன்றின் முன்னிலையில் உள்ள
at a premium = மிகை விலையில்
attempted murder = கொலை எத்தனம்
attorney = சட்டத்தரணி
Attorney General = சட்டத்துறை அதிபதி
authentic (genuine) document = மெய்யாவணம்
authenticated document = மெய்யுறுதிப்படுத்திய ஆவணம்
authoritative document = அதிகாரபூர்வமான ஆவணம்
authority on law = சட்டவியல் விற்பன்னர்
authority to enforce = நடைமுறைப்படுத்தும் அதிகாரம்
authorize to enforce the act = சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமளி
autopsy = post mortem examination = பிரேத பரிசோதனை
aver = உறுதிகூறு
average prudent person = சராசரி அறிவுள்ள ஆள்
averment = உறுதிக்கூற்று
bad faith = intent to deceive = ஏமாற்றும் எண்ணம்
bail = பிணை
bail bond = பிணை முறி
bailee = ஒப்படையுறுநர்
bailiff = நீதிமன்ற அதிகாரி
bailment = ஒப்படை பெறுகை
bailor = ஒப்படையிடுநர்
balance of evidence = சான்றுச் சமநிலை
balance of probabilities = நிகழ்தகவுச் சமநிலை
bankrupt = (1) நொடித்த (2) நொடித்தவர்
bankruptcy = நொடிப்பு
Bar = (1) சட்டபீடம் (2) சட்டவுரைஞர் குழாம்
barrister = சட்டவுரைஞர்
bastard = புறமணப்பிள்ளை
be admitted (called) to the bar = சட்டவாளராக அங்கீகரிக்கப்படு
be faithful and bear true allegiance = நம்பிக்கைக்குரியவராகவும் மெய்விசுவாசம் கொண்டவராகவும் விளங்கு
Bench = (1) நீதிப்பீடம் (2) நிதிபதிகள் குழாம்
bench decision = நீதிமன்ற முடிபு
bench warrant = நீதிமன்றப் பிடியாணை
beneficiary = பயன்பெறுநர்
benefit of the doubt = ஐய நன்மை
best interests of the child = பிள்ளையின் நன்னலன்கள்
bestiality = விலங்குறு புணர்ச்சி
beyond a reasonable doubt = நியாயமான ஐயத்துக்கிடமின்றி
bigamy = இருதாரம்
binding rule = பிணிக்கும் விதி
bona fide = (1) நேரிய (2) நல்லெண்ணத்துடன் கூடிய
bona fide mistake = கருதாப் பிழை
bona fides = நேரிய எண்ணம் = நல்லெண்ணம்
bond = (1) முறி (2) ஒப்பந்தம்
Border Services Agency = எல்லைச் சேவைகள் முகமையகம்
born out of wedlock = மணமாகாத பெற்றோர்க்குப் பிறந்த
boyfriend = ஆண் கூட்டாளி
breach = (1) மீறு (2) மீறல்
breach of promise = வாக்குறுதி மீறல்
brief = வழக்கேடு
buggery = குதவழிப் புணர்ச்சி
burden of proof = onus of proof = எண்பிக்கும் பொறுப்பு = நிரூபிக்கும் பொறுப்பு
burglary = கன்னமிடல் = வீடு புகுந்து திருடல்
by proxy = பதிலாள் மூலம்
by word of mouth = வாய்ச்சொல் மூலம்
by-law = உபவிதி
call a witness = சாட்சியை அழை
changing the location of a hearing = விசாரணைக்குரிய இடத்தை மாற்றல்
citizen = குடியாளர் = பிரசை
citizen's arrest = குடியாளர்-கைது
citizenship = குடியுரிமை
claim for refugee protection = அகதிப் பாதுகாப்புக் கோரிக்கை
claimant without identification = அடையாள ஆவணங்களற்ற கோரிக்கையாளர்
clause = வாசகம்
client = சேவையுறுநர்
Common Law = பொதுமைச் சட்டம்
common-law partner = கூடிவாழும் துணைவர்
concession = சலுகை
conditional discharge = நிபந்தனையுடன்கூடிய தண்டனைவிலக்கு
conditional sentence = நிபந்தனையுடன்கூடிய தண்டனைத்தீர்ப்பு
confidentiality of application = விண்ணப்பத்தின் அந்தரங்கம்
conscientious objector = மனச்சாட்சிப்படி மறுப்பவர்
consolidated grounds of protection = பாதுகாப்பு வழங்குவதற்கு ஒருங்குதிரட்டிய ஆதாரங்கள்
continued detention = தொடர்ந்து தடுத்துவைப்பு
contravene, breach, infringe = முரண்படு, மீறு, வரம்புமீறு
controversial = சர்ச்சைக்குரிய
controversy = சர்ச்சை
convention against torture = சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம்
convention refugee = ஒப்பந்த அகதி
corroborate = ஒப்புறுதிப்படுத்து
counsel on record = பதிவிலுள்ள சட்டமதிஞர்
coverage = காப்பீடு
credibility issues = நம்பகப் பிரச்சனைகள்
credible evidence = நம்பத்தக்க சான்று
crimes against humanity = மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்
cross examination = குறுக்கு விசாரணை
cruel punishment = கொடூரமான தண்டனை
cruel treatment = கொடூரமாக நடத்துதல்
cultural fabric = பண்பாட்டுக் கட்டுக்கோப்பு
custody = கட்டுக்காப்பு
Customary Law = வழமைச் சட்டம்
damage = சேதம்
damages = இழப்பீடு
danger to public safety = பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து
danger to the security of the country = நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து
dating = உடன்போக்கு
De Novo = பழையபடி
death sentence = மரண தண்டனைத் தீர்ப்பு
decision rendered orally = வாய்மொழி முடிபு
delinquent teenager = நெறிதிறம்பும் பதின்மவயதினர்
democratic values = மக்களாட்சி விழுமியங்கள்
deny access = வழி மறு
departure order = வெளியேற்றக் கட்டளை
deportation order = நாடுகடத்தல் கட்டளை
designated representative = அமர்த்தப்பட்ட பிரதிநிதி
detention review = தடுத்துவைப்பு பற்றிய மீள்நோக்கு
detrimental to the national interest = தேசிய நலனுக்குக் கேடான
Diaspora = புலம்பெயர்ந்தோர்
discharge of liability = பொறுப்புகளை நிறைவேற்றல்
disciplinary action = ஒழுக்காற்று நடவடிக்கை
discipline = ஒழுக்காறு
disclose personal information = சொந்த விபரங்களை வெளிப்படுத்து
disclosure of documents = ஆவணங்களை வெளிப்படுத்தல்
dismissal of an appeal = மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தல்
displaced person = இடம்பெயர்ந்த ஆள்
double entendre = இரட்டுற மொழிதல்
dual intent = இரட்டை நோக்கம்
economic sanctions = பொருளாதார நிர்ப்பந்திப்புகள்
eligibility to refer claim = கோரிக்கையைப் பாரப்படுத்தும் தகவு
embargo = தடையாணை
embezzlement = கையாடல்
emblem = சின்னம்
emergency = அவசரகால நிலைமை
emigrate = குடியகல்
emigration = குடியகல்வு
enact = சட்டமாக்கு
enactment = சட்டவாக்கம்
encumbrance = பாரபந்தம்
endorse = மேலொப்பமிடு = மாட்டறை
endorsement = மேலொப்பம் = மாட்டறைவு
enforcement of removal orders = அகற்றல் கட்டளைகளை நிறைவேற்றல்
entering and remaining = உட்புகுந்து தங்கியிருத்தல்
entering and remaining = புகுந்து தங்கியிருத்தல்
equitable = ஒப்புரவான
equivocal statement = கருத்துமயக்கந்தரும் கூற்று
equivocation = கருத்துமயக்கல் = மழுப்பல்
espionage = ஒற்றாடல்
establish identity = அடையாளத்தை எண்பி = அடையாளத்தை நிரூபி
established custom = நிலைபெற்ற வழமை
estate = மரணச்சொத்து
estate trustee = மரணச்சொத்துப் பொறுப்பாளர்
ethical jurisprudence = ஒழுக்கச் சட்டவியல்
ethnic cleansing = இன ஒழிப்பு
evade payment = கொடுப்பனவைத் தட்டிக்கழி
evict = வெளியேற்று
evidence relating to identity = அடையாளம் தொடர்பான சான்று
evil state of mind = தீய மனநிலை
ex parte = மறுதரப்பின்றி
ex parte trial = மறுதரப்பின்றி இடம்பெறும் விளக்கம் (விசாரணை)
examination-in-chief = direct examination = நேர் விசாரணை
exceptions to public hearing = பொது விசாரணைக்கு விதிவிலக்குகள்
excessive demand = மட்டுமீறிய கோரிக்கை
Excise Law = மதுவரிச் சட்டம்
excluded persons = விலக்கப்பட்ட ஆட்கள்
exclusion clause = விலக்கல் வாசகம்
exclusion order = விலக்கல் கட்டளை
exclusive jurisdiction = பிரத்தியேக நியாயாதிக்கம்
exculpate = குற்றத்திலிருந்து விடுவி
exhibit = தடயம்
exonerate = பழிவிலக்கு
expedited hearing = துரித விசாரணை
expert-witness = நிபுணர்-சாட்சி
express purpose = வெளிப்படை நோக்கம்
expulsion order = வெளியகற்றல் கட்டளை
extenuating circumstances = தணிக்கும் சூழ்நிலைகள்
extortion = வன்பறி
extra judicial = நீதிமுறைக்குப் புறம்பான
extra territorial = ஆள்புலங் கடந்த
extradition procedure = வேற்றரசிடம் ஒப்படைக்கும் நடைமுறை
extraneous evidence = தொடர்பற்ற சான்று
eye witness = கண்கண்ட சாட்சி = நேரில் கண்ட சாட்சி
fabrication of evidence = சான்று புனைவு
fact = நிகழ்பாடு
factor = காரணி
failure to appear at the proceeding = விசாரணைக்குத் தோற்றத் தவறுகை
fair and efficient = செவ்விய, திறமான
fair and efficient procedures = நியாயமான, திறமான நடைமுறைகள்
fair and equitable = செவ்விய, ஒப்புரவான
fair and reasonable = செவ்விய, நியாயமான
fair trial = செவ்விய விசாரணை
fairness and natural justice = செவ்வையும் இயற்கை நீதியும்
fairness and natural justice = நியாயமும் இயற்கை நீதியும்
false affidavit = பொய்ச் சத்தியக்கடதாசி
false evidence = (1) பொய்ச் சான்று (2) பொய்ச் சாட்சியம்
false statement = பொய்யான கூற்று
falsely personate = ஆள்மாறாட்டம் செய்
falsify = பொய்யாக்கு
falsity = பொய்மை
family class = குடும்ப வகுப்பு
family member = குடும்ப உறுப்பினர் (அங்கத்தவர்)
fault = தவறு = தப்பு
fear of persecution = கொடுமைக்கு உள்ளாகும் அச்சம்
Federal Court = மத்திய நீதிமன்று
felony = அடாப்பழி
Feudal Law = மானியச் சட்டம்
fiduciary partnership = நம்பகப் பங்குடைமை
final and conclusive = இறுதியான, முடிபான
final decision = இறுதி முடிபு
fine = அபராதம்
first degree murder = திட்டமிட்ட கொலை = முன்சிந்தித்து திட்டமிட்ட வன்மக் கொலை
first detention review = முதலாவது தடுத்துவைப்பு மீள்நோக்கு
first offender = முதல் தவறாளி
fiscal property = அரசிறை ஆதனம்
foot-path = ஒற்றை அடிப்பாதை
Force of Law = சட்ட வலு
forcible confinement = வலுக்கட்டாய மறிப்பு
forcible entry = வலுக்கட்டாய நுழைவு
foreign national = வெளிநாட்டவர்
forensic evidence = தடயவியற் சான்று
forensics = தடயவியல்
forged document = போலி ஆவணம்
forgery = (1) போலியாக்கம் (2) போலியொப்பம்
form and language of documents = ஆவணங்களின் உருவும் மொழியும்
formal inquiry = விதிமுறை விசாரணை
fortuitous meeting = தற்செயலான சந்திப்பு
forty-eight (48) hour review = நாற்பத்தெட்டு (48) மணித்தியால மீள்நோக்கு
foster parent = வளர்ப்புப் பெற்றார்
fraudulent claim = மோசடியான கோரிக்கை
free light = தங்குதடையற்ற வெளிச்சம்
fugitive criminal = தப்பியோடிய குற்றவாளி
Fundamental Law = அடிப்படைச் சட்டம்
further reviews = மேலதிக மீள்நோக்குகள்
gender related issue = பால் தொடர்பான பிரச்சனை
general provisions = பொது ஏற்பாடுகள்
generalized risk = பொதுப்படையான ஆபத்து
generally known fact = பொதுவாக அறியப்பட்ட நிகழ்பாடு
genocide = இனக்கொலை
genuine = bona fide = உண்மையான = மெய்யான
girlfriend = பெண் கூட்டாளி
give evidence = testify = சாட்சியம் அளி = சான்று பகர்
good faith = bona fides = நேரிய நோக்கம் = நன்னோக்கம்
goods and chattels = பொருட்களும் தளபாடங்களும்
goodwill = நல்லெண்ணம்
government-in-exile = சேயக அரசாங்கம்
grant permanent resident status = நிரந்தர வசிப்பு நிலை வழங்கு
grave and sudden provocation = பாரதூரமான திடீர் ஆத்திரமூட்டல்
grievance = உளக்குறை = மனக்குறை
grievous bodily harm = கடும் உடலூறு
gross misconduct = மிக்க துர்நடத்தை
grounds of security = பாதுகாப்புக் காரணங்கள்
guarantee = உத்தரவாதம்
guilt = குற்றப்பாடு
habeas corpus = ஆட்கொணர்வு ஆணை
habitual criminal = பழகிப்போன குற்றவாளி
half brother = ஒருவழிச் சகோதரன்
handcuffs = கைவிலங்கு
harassment = தொந்தரவு
harm = தீங்கு = கேடு
head office = தலைமை அலுவலகம்
headquarters = தலைமையகம்
health (to protect the) = உடல்நலம் (காக்க)
health grounds = உடல்நிலைக் காரணங்கள்
hearing = விசாரணை
hearsay evidence = சொல்லக்கேட்ட சாட்சியம்
heir = மரபுரிமையாளர் = வாரிசு
hereditary right = பரம்பரை உரிமை
high treason = அரசதுரோகம்
high way robbery = வழிப்பறிக் கொள்ளை
hoarding = பதுக்கல்
hold in common = பொதுவில் வைத்திரு
hold on remand = விளக்க மறியலில் வைத்திரு
hold to ransom = கப்பம் கேட்டு வைத்திரு
homicide = கொலை
homosexuality = ஓரினச்சேர்க்கை
human rights violations = மனித உரிமை மீறல்கள்
human smuggling = ஆள் கடத்தல்
human trafficking = ஆள் கடத்து வியாபாரம்
humanitarian and compassionate grounds = மனிதபிமான, கருணை அடிப்படைகள்
humiliate = அவமானப்படுத்து
identity document = ஆளடையாள ஆவணம்
illegal contract = சட்டவிரோத ஒப்பந்தம்
illegitimate child = சட்டப்பேறற்ற பிள்ளை
illicit intercourse = கள்ள உடலுறவு
immigration = குடிவரவு
Immigration and Refugee Protection Act = குடிவரவு–அகதிப் பாதுகாப்புச் சட்டம்
immigration consultant = குடிவரவு உசாவலர்
immigration counsel = குடிவரவுச் சட்டமதிஞர்
Immigration Division = குடிவரவுப் பகுதி
immoral conduct = ஒழுக்கமற்ற நடத்தை
impeach = பழிமாட்டறை = வசைகற்பி = களங்கம்கற்பி
impeachment = பழிமாட்டறைவு = வசைகற்பிப்பு = களங்கம்கற்பிப்பு
Imperative Law = கட்டாயச் சட்டம்
implied malice = உட்கிடை வன்மம்
impose a fine = அபராதம் விதி
impotency = புணர்வலுவின்மை = புணர்வலுவீனம்
impotent = புணர்வலுவற்ற
impound = confiscate = பறிமுதல்செய்
impracticable = செயற்படுத்தவியலாத
imprison = சிறையிடு
imprisonment = சிறையீடு
improbable = சாத்தியமாகாத
impugn = எதிர்த்துரை
imputation of motive = உள்நோக்கம் கற்பித்தல்
in bad faith = தீயெண்ணத்தில்
In Camera = இரகசியமாக
in express terms = வெளிப்படையான சொற்களில்
in force = நடைமுறையில் உள்ளது
in good faith = நல்லெண்ணத்தில்
in lieu of = பதிலாக
in open court = நீதிமன்றின் முன்
in perpetuity = என்றென்றும்
inadmissibility = அனுமதிக்கவியலாமை
inadmissibility of evidence = சான்று அனுமதிக்கவியலாமை
inadmissible claimant = அனுமதிக்கவியலாத கோரிக்கையாளர்
inadmissible evidence = அனுமதிக்கவியலாத சான்று
inadmissible family member = அனுமதிக்கவியலாத குடும்ப உறுப்பினர்
inalienable rights = பராதீனப்படுத்தவியலாத உரிமைகள்
incarceration = சிறையீடு
incest = முறையில்லார் புணர்ச்சி
incidental expenses = இடைநேர் செலவு
incite = ஏவு
incompetent person = தகுதியற்ற ஆள்
inconsistency = முன்பின் முரண்பாடு
inconsistent = முன்பின்முரணான
incontrovertible = மறுத்தற்கரிய
incorrigible = திருத்தவியலாத
incriminate = குற்றஞ்சுமத்து
inculpating statement = குற்றஞ்சாட்டும் கூற்று
indecent word = இழிசொல்
indemnify = இழப்பிடு
indemnity = இழப்பீடு
indenture = ஒப்பந்த உறுதிமுறி
independent witness = சுதந்திரமான சாட்சி
indict = குற்றம்பகரு
indictment = குற்றப்பகர்வு
induce = தூண்டு
inducement = தூண்டுதல்
ineligible claim = தகவற்ற கோரிக்கை
inequitable = ஒப்புரவற்ற
inequity = ஒப்புரவின்மை
infamy = இழிபழி
infanticide = சிசுக்கொலை
inference = அனுமானம்
inflammatory language = கொதிப்பூட்டும் மொழி
informally and quickly = முறைசாராமலும் விரைவாகவும்
informant = தகவலாளர்
infraction = மீறுகை
infringe copyright = பிரதியுரிமை மீறு
inherent defect = உள்ளார்ந்த குறைபாடு
inheritance = மரபுரிமை
inhuman = மனிதாபிமானமற்ற
injunction = தடைக்கட்டளை
injure = காயப்படுத்து = ஊறுபடுத்து
injurious interference = ஊறுசெய் தலையீடு
injury = காயம் = ஊறு
innocent misrepresentation = வஞ்சகமற்ற பிறழ்கூற்று
innuendo = மறைமுக அவதூறு
inquest = மரண விசாரணை
inquiry = விசாரணை
instigate = தூண்டு
instrument = (1) கருவி (2) சாதனம் (3) ஆவணம்
interim order = இடைக்காலக் கட்டளை
interlocutory judgment = இடைக்காலத் தீர்ப்பு
intermarriage = மாற்றுமணம்
internal flight alternative = உள்நாட்டில் மாற்றுப் புகலிடம்
International Law = சர்வதேயச் சட்டம்
international legal obligations = சர்வதேய சட்டக் கடப்பாடுகள்
International Tribunal = சர்வதேய நியாயசபை
interpreter = உரைபெயர்ப்பாளர்
intervene = தலையிடு = இடையிடு
intervene in the appeal = மேன்முறையீட்டில் தலையிடு
intervention = தலையீடு = இடையீடு
intervention by the minister = அமைச்சர் தலையிடல்
intestacy = மரணசாதனமின்மை = இறப்பாவணமின்மை
intestate heir = மரணசாதனமில்லா மரபுரிமையாளர்
intestate succession = மரணசாதனமில்லா பின்னுரிமைப்பேறு
intimidate = மிரட்டு
intimidation = மிரட்டல்
intoxication = வெறி
intra vires = அதிகாரத்துக்கு உட்பட்ட
intrinsic evidence = உள்ளமைந்த சான்று
invalid coin = செல்லா நாணயம்
invalid legal proceeding = செல்லுபடியற்ற சட்ட நடவடிக்கை
invalid proceeding = செல்லுபடியற்ற விசாரணை
inviolable rights = மீறவொண்ணாத உரிமைகள்
involuntary manslaughter = மனமிசையாத ஆள்வதம் = கைமோசக்கொலை
ipso facto = அந்நிகழ்வாலே
ipso jure = அச்சட்டத்தினாலே
irrefutable presumption = மறுத்து எண்பிக்கமுடியாத ஊகம்
irreparable loss = ஈடுசெய்யமுடியாத இழப்பு
irresistible impulse = அடக்கமுடியாத உந்தல்
irreversible change = மீளவொண்ணாத மாற்றம்
irrevocable power of attorney = நீக்கமுடியாத பதிலாளித் தத்துவம்
issue of fact = நிகழ்பாட்டுப் பிரச்சனை
issue of law = சட்டப் பிரச்சனை
joining claims or applications = கோரிக்கைகளை அல்லது விண்ணப்பங்களை இணைத்தல்
judge = நீதிபதி
judgement = தீர்ப்பு
judicial consideration = நீதித்துறையின் பரிசீலனை
judicial pre-trial = நீதிபதி முன்னிலையில் முன்விசாரணை
judicial release = நீதித்துறை அளிக்கும் விடுதலை
judicial review = நீதித்துறை மீள்நோக்கு
judicial system = நீதி முறைமை
jurisprudential guides = சட்டவியல் வழிகாட்டிகள்
jurist = சட்டவல்லுநர்
juror = யூரர்
jury = யூரர் குழாம்
just and reasonable = நீதியானதும் நியாயமானதும்
Justice = (1) நீதி (2) நீதியரசர்
Justice of the Peace = சமாதான நீதிவான்
justiciable matter = நீதியாய்வுக்குரிய விடயம்
justifiable homicide = நியாயப்படுத்தக்கூடிய கொலை
Juvenile Court = Youth Court = இளையோர் நீதிமன்று
juvenile delinquency = இளையோர் நெறிபிறழ்வு
juvenile delinquents = நெறிபிறழும் இளையோர்
keep the peace = அமைதி பேண்
kidnap = ஆட்கடத்து
Labour Tribunal = தொழில் நியாசபை
language of proceedings = விசாரணை மொழி
law = சட்டம்
Law of Succession = பின்னுரிமைச் சட்டம்
Law of Tort = தீங்கியற் சட்டம்
lawful owner = சட்டபூர்வ உடைமையாளர்
lawfulness = சட்டபூர்வம்
lawsuit = வழக்கு
lawyer = சட்டவாளர்
lease = (1) வாடகை உடன்படிக்கை (2) குத்தகை
leave to appeal = மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி
legacy = விருப்பாவணக் கொடை
legal advice = சட்ட மதியுரை
legal advisor = சட்ட மதியுரைஞர்
legal aid = சட்ட உதவிக்கொடை
legal burden = சட்டப் பொறுப்பு
legal clinic = சட்ட உதவிக்களம்
legal error = சட்ட வழு
legal phraseology = சட்டச் சொல்நடை
legal procedure = சட்ட நடைமுறை
legal proceedings = சட்ட நடவடிக்கை
legal remedy = சட்டப் பரிகாரம்
legal status = சட்டத் தகுதிநிலை
legal system = சட்ட முறைமை
legal technicality = சட்ட நுட்பம்
legalese = சட்டமொழி
legality = சட்டதிட்பம்
legalize = சட்டபூர்வமாக்கு
legally binding action = சட்டப்படி பிணிக்கும் நடவடிக்கை
legally innocent = சட்டப்படி குற்றமற்ற
legislation = சட்டவாக்கம்
legislature = சட்டவாக்க மன்றம்
legitimacy = சட்டப்பேறு
legitimacy case = சட்டப்பேறு வழக்கு
legitimate child = சட்டப்பேறுற்ற பிள்ளை
legitimize = சட்டப்பேறாக்கு
lesbian = ஓரினச்சேர்க்கைப் பெண்
lessee = குத்தகையுறுநர்
lessor = குத்தகையிடுநர்
letters patent = அரச பத்திரம்
levy = (1) அறவிடு (2) அறவீடு
libel = வரைதூறு = எழுத்திலான அவதூறு
lien = பாத்தியம்
life imprisonment = வாழ்நாள் சிறையீடு
liquidate = ஒழித்துக்கட்டு
liquidator = ஒழித்துக்கட்டுநர்
list of exhibits = தடய நிரல்
litigant = வழக்காடி
litigation = வழக்காடல்
local custom = ஊர் வழக்கம்
local jurisdiction = இட நியாயாதிக்கம்
loitering = சுற்றித்திரிதல்
loss of status = தகுதிநிலை இழப்பு
loss of status and removal = தகுதிநிலை இழப்பும் அகற்றலும்
low income cutoff (LICO) = தாழ்ந்த வருமான வரம்பு
lunacy = உன்மத்தம்
lunatic = உன்மத்தர்
magistrate = நீதிவான்
maiming = அங்கவீனப்படுத்தல்
maintenance case = தாபரிப்பு வழக்கு
make an appeal = மேன்முறையிடு
make representations = எடுத்துரை
malfeasance = தீது
malice = வன்மம்
malice aforethought = முன்சிந்தித்த வன்மம்
malicious desertion = வன்மம்கொண்டு கைவிடல்
malingering = நோயுற்றதாகப் பாசாங்குசெய்தல்
malpractice = முறைகேடான செயல்
mandate = பணிப்பாணை
mandatory detention = சட்ட நியதிப்படி தடுத்துவைப்பு
mandatory injunction = பணிப்புறுத்தும் தடைகட்டளை
manslaughter = ஆள்வதம்
marital status = மணஞ்சார் தகுதிநிலை
Maritime Law = கடற் சட்டம்
marriage = (1) மணம் (2) மணவாழ்வு
marriage of convenience = வசதிக்கான திருமணம்
Martial Law = படைச் சட்டம்
material evidence = முக்கிய சான்று
material witness = முக்கிய சாட்சி
maternal inheritance = தாய்வழி மரபுரிமை
matrimonial home = மணவாழ்வு மனை
matrimony = மணம்
matter of law = சட்ட விடயம்
mediate = இணக்குவி
mediation = இணக்குவிப்பு
mediator = இணக்குவிப்பாளர்
medical examination = வைத்திய பரிசோதனை
medical inadmissibility = வைத்திய காரணங்களால் அனுமதிக்கவியலாமை
member of the economic class = பொருளாதார வகுப்பினர்
member of the family class = குடும்ப வகுப்பினர்
mental agitation = மன உளைச்சல்
mental disability = மன வலுவீனம் = உள வலுவீனம்
mental incompetence = மனத் தகுதியீனம் = உளத் தகுதியீனம்
Mercantile Law = வணிகச் சட்டம்
military service = படைச் சேவை
minister's counsel = அமைச்சரின் சட்டமதிஞர்
misappropriation = கையாடல்
mischief = தீங்கு
misconduct = துர்நடத்தை
misdeed = துர்ச்செயல்
misdemeanour = பொல்லாங்கு
misrepresentation = பிறழ்கூற்று
mistake of fact = நிகழ்பாட்டு விளக்க வழு
mistake of law = error of law = சட்ட விளக்க வழு
mistaken identity = தப்படையாளம்
mistress = வைப்பாட்டி
mistrial = வழுபடு விசாரணை
mistrust = அவநம்பிக்கை
mitigating circumstance = தணிக்கும் சூழ்நிலை
mitigating circumstances = தணிக்கும் சூழ்நிலைகள்
mob violence = கும்பல் வன்முறை
molest = மானபங்கப்படுத்து
Monetary Law = நாணயச் சட்டம்
monogamy = ஒற்றைமணவாழ்வு
moral code = ஒழுக்கக் கோவை
moral turpitude = ஒழுக்கக் கேடு
moratorium = தற்காலிகத் தடை
Municipal Law = உள்ளாட்சிச் சட்டம்
murder = கொலை
mutilate = கண்டதுண்டமாக்கு
mutiny = படைக்கலகம்
natural justice = இயற்கை நீதி
negligence = கவலையீனம்
new evidence = புதிய சான்று
new immigrant = புதிய குடிவரவாளர்
next of kin = கிட்டிய இரத்த உறவினர்
nexus = தொடர்பு
nominal payment = பெயரளவிலான கொடுப்பனவு
non-capital offence = மரண தண்டனைக்கு உள்ளாக்காத தவறு
non-cognizable offence = பிடியாணையின்றிக் கைதுக்கு உள்ளாக்காத தவறு
non-compliance with the act = சட்டத்துக்கு அமைந்தொழுகாமை
non-disclosure of information = தகவல் வெளிப்படுத்தாமை
normal prudence = சாதாரண மதியுடைமை
notarial agreement = நொத்தாரிசு மூலமான உடன்படிக்கை
notarized document = நொத்தாரிசினால் சான்றளிக்கப்பட்ட ஆவணம்
notary = நொத்தாரிசு
notice of appeal = மேன்முறையீடு பற்றிய அறிவித்தல்
notice of decision = முடிபு பற்றிய அறிவித்தல்
notice of intervention = தலையீடு பற்றிய அறிவித்தல்
notice to appear = தோற்றும்படி அறிவித்தல் = வெளிப்படுமாறு அறிவித்தல்
notification = அறிவிப்பு
notify = அறிவி
notwithstanding lapse of time = காலங் கழிந்தும்
null and void = வெற்றுவெறிதான = வெற்றும் வறிதுமான
nullify = வெறிதாக்கு
oath = சத்தியம்
oath or solemn affirmation = சத்தியம் அல்லது பற்றுறுதிமொழி
object = ஆட்சேபி
objection = ஆட்சேபனை
objectionable evidence = ஆட்சேபிக்கத்தக்க சான்று
obligation = கடப்பாடு
obscene language = ஆபாச மொழி
obsolescent etiquette = அருகும் ஆசாரம் = வழக்கொழியும் ஆசாரம்
obsolete etiquette = அருகிய ஆசாரம் = வழக்கொழிந்த ஆசாரம்
obstruct = தடங்கல் விளைவி
obstruction = தடங்கல்
obstruction of justice = நீதிக்குத் தடங்கல் விளைவித்தல்
of sound mind = சித்தநலம் வாய்ந்த = உளநலம் வாய்ந்த
offence = தவறு
offender = தவறாளி
offensive weapon = தீங்கு விளைவிக்கும் ஆயுதம்
offspring = பிள்ளை = மகவு
ombudsman = முறைகேள் அதிகாரி
on parole = நன்னடத்தைப் பிணையில் உள்ள
on probation = நன்னடத்தைக் கண்காணிப்பில் உள்ள
onus of proof = எண்பிக்கும் பொறுப்பு = நிரூபிக்கும் பொறுப்பு
opinion = அபிப்பிராயம்
opprobrium = பழி
oral contract = வாய்மொழி ஒப்பந்தம்
oral decision = வாய்மொழி முடிபு
Order-in-Council = அரச மன்றக் கட்டளை
ordinance = கட்டளைச் சட்டம்
organized crime = கூட்டுக் குற்றம்
organized criminality = கூட்டுச் சேர்ந்து குற்றம் புரிகை
original document = மூல ஆவணம்
orphan = அனாதை
outstanding charge = தீர்க்கப்படாத குற்றச்சாட்டு
over-ride = மீச்செல்
over-rule = புறத்தொதுக்கு
overtly and covertly = வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்
overturn a decision = ஒரு முடிபை இல்லாதொழி
pact = உடன்படிக்கை
panel of jurors = யூரர் குழாம்
paramour = கள்ளக்காதலர்
pardon = மன்னி(ப்பு)
parental consent = பெற்றோரது சம்மதம்
partnership = பங்குடைமை
party in default = கடப்பாடு தவறிய தரப்பு
patent = ஆக்கவுரிமை
paternal inheritance = பிதாவழி மரபுரிமை
patrimony = முதுசொம்
patrol = காவற்சுற்று
peace officer = அமைதிபேண் அதிகாரி
pecuniary loss = பண நட்டம்
pedigree = பரம்பரை
Penal Code = தண்டனைச் சட்டக்கோவை
penalty = தண்டம்
penology = தண்டவியல்
people smuggling = ஆட்கடத்தல்
peremptory adjournment = மீறமுடியாத ஒத்திவைப்பு
peremptory order = மீறமுடியாத கட்டளை
perjury = பொய்ச்சாட்சியம்
permanent resident = நிரந்தர வாசி
permit = அனுமதிப்பத்திரம்
persecuted person = கொடுமைப்படுத்தப்பட்ட ஆள்
person concerned = சம்பந்தப்பட்ட ஆள்
person detained = தடுத்து வைக்கப்பட்ட ஆள்
person in need of protection = பாதுகாப்புத் தேவையான ஆள்
personal bond = ஆட்பிணை
personal information form = ஆள் தகவல் படிவம் = ஆள் விபரப் படிவம்
personate = ஆள்மாறாட்டம் செய்
personation = ஆள்மாறாட்டம்
petition = மனு
petitioner = மனுதார்
physical injury = உடற்காயம் = உடலூறு
piracy = கடற்கொள்ளை
pirate = கடற்கொள்ளையர்
plaint = முறையீடு
plaintiff = வழக்காளி
plea bargain = மன்றாட்டப் பேரம்
plead guilty = குற்றத்தை ஒப்புக்கொள்
political opinion = அரசியல் அபிப்பிராயம்
polyandry = பலகணவருடைமை
polygamy = பலமனைவியருடைமை
port of entry = நுழைவுத் துறை
positive evidence = உறுதியான சான்று
possession = உடைமை
post mortem examination = autopsy = பிரேத பரிசோதனை
posthumous = இறந்தபின்னான
post-nuptial = மணத்தின் பின்னான
postscript = பிற்குறிப்பு
power of attorney = பதிலாளித் தத்துவம்
precedent = முன்தீர்ப்பு
precept = பணிப்பாணை
predeceasing spouse = முன் இறக்கும் வாழ்க்கைத்துணை
predecessor = முன்னமைந்தவர்
predetermined = முன்னரே தீர்மானிக்கப்பெற்ற
pre-emption = முன்வாங்குரிமை
prefer an appeal = மேன்முறையீடு முன்வை
preferential claim = முன்னுரிமைக் கோரிக்கை
prejudicial to the public interest = பொதுமக்களின் நலனைப் பாதிக்கும்
preliminary examination = முதனிலை விசாரணை
premarital intercourse = மணமுன் உடலுறவு
premeditated act = முன்சிந்தித்த செயல்
premise = எடுகூற்று
preponderance of evidence = சான்றுப் பெரும்பான்மை
preponderance of probability = சாத்தியப் பெரும்பான்மை
pre-removal risk assessment = அகற்றலுக்கு முந்திய ஆபத்துக் கணிப்பீடு
prerogative = விஞ்சுரிமை = மீயுரிமை
prescribed period = விதிக்கப்பெற்ற காலப்பகுதி
presume = ஊகி
presumption = ஊகம்
pretended marriage = பாசாங்கு மணம்
pre-trial = முன் விசாரணை
prevarication = மழுப்புதல்
preventive punishment = தடுப்புத் தண்டனை
prima facie evidence = முதல் தோற்றச் சான்று
prima facie = முதல் தோற்றத்தில்
primary evidence = முதனிலைச் சான்று
primus inter pares = ஒப்பாருள் முதல்வர்
principal and agent = முதல்வரும் முகவரும்
principal and interest = முதலும் வட்டியும்
principles of justice = நீதி நெறிகள்
prior encumbrance = முந்திய பாரபந்தம்
priority = முதன்மை
private conversation = தனிப்பட்ட உரையாடல்
Private Law = தனியாள் சட்டம்
private sector = தனியார் துறை
privilege = சிறப்புரிமை
Privy Council = கோமறை மன்றம்
probate = இறப்பாவணச் சான்றிதழ்
probative value = எண்பித்தற் பெறுமதி = நிரூபித்தற் பெறுமதி
procedure = நடைமுறைமை
proceeding = நடபடிக்கை
proceedings = legal proceedings = சட்ட நடபடிக்கை
proceeds of the sale = விற்பனை வருவாய்
process = (1) மன்றாணை (2) படிமுறை
proclaimed offender = விளம்பப்பட்ட தவறாளி
professional incompetence = துறைமைத் தகுதியீனம்
prohibition = விலக்கல்
prohibition against disclosure of information = தகவல் வெளிப்படுத்துவதற்கு எதிரான தடை
promise = வாக்குறுதி(யளி)
promulgate = முரசறை
promulgation = முரசறைவு
pronounce man and wife = கணவர், மனைவி என்று விளம்பு
proof = சான்று
proof that document was provided = ஆவணம் வழங்கிய சான்று
proprietor = உரிமையாளர்
proscribe = தடைவிதி
proscription = தடைவிதிப்பு
prosecute = வழக்குத்தொடு = வழக்குத்தொடரு
prosecution of designated offences = குறிக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய வழக்குத்தொடுப்பு
prosecution of offences = குற்றங்களுக்கான வழக்குத்தொடுப்பு
prosecutor = வழக்குத்தொடுநர் = வழக்குத்தொடருநர்
protected person = பாதுகாக்கப்பட்ட ஆள்
protection determination = பாதுகாப்புத் தீர்மானம்
protocol = வரைவுடன்பாடு
prove = எண்பி = நிரூபி
provision = ஏற்பாடு
provisional plan = இடையேற்பாட்டுத் திட்டம்
proviso = காப்புவாசகம்
provocation = ஆத்திரமூட்டல்
proxy = பதிலாள்
prudent man = மதியுள்ள மனிதன்
puberty = பூப்பு
public health and public safety = பொதுமக்களின் நலவாழ்வும், பாதுகாப்பும்
public hearing = பகிரங்க விசாரணை
public proceeding = பகிரங்க நடவடிக்கை
public right of way = பொது வழியுரிமை
public utility service = பொதுமக்கள் பயன்பாட்டுச் சேவை
publication ban = வெளியீட்டுத் தடை
punitive powers = தண்டிக்கும் அதிகாரம்
quash a conviction = குற்றத்தீர்ப்பை நீக்கு
quasi-judicial procedure = மருவு-நீதி நடைமுறை
raid = திடீர்ச்சோதனை
ransom = கப்பம்
rape = வன்புணர்ச்சி = வல்லுறவு
ratification = ஒப்புதலளிப்பு
ratify = ஒப்புதலளி
ready to proceed = விசாரணைக்குத் தயாரான
reasonable doubt = நியாயமான ஐயம்
reasonable grounds = நியாயமான ஆதாரம்
reasons for decision = முடிபுக்கான காரணங்கள்
rebut = மறுத்துரை
recidivist = திருந்தாத் தவறாளி
reciprocal reward = இருவயினொத்த கைமாறு
reciprocity = இருவயினொப்பு
recognize as a convention refugee = ஒப்பந்த அகதியாக ஏற்றுக்கொள்
reconnaissance aircraft = வேவு வான்கலம்
reconsideration = மீள்கணிப்பு
reconvene the parties = தரப்புகளை மீளக் கூட்டு
redetermination = மீள்தீர்மானம்
re-enter = மீள நுழை
re-examination = மீள்-விசாரணை
refer the claim = கோரிக்கையைப் பாரப்படுத்து
referred claim = பாரப்படுத்திய கோரிக்கை
refugee = அகதி
refugee convention = அகதி ஒப்பந்தம்
refugee protection = அகதிப் பாதுகாப்பு
refugee protection division = அகதிப் பாதுகாப்புப் பகுதி
refugee protection officer = அகதிப் பாதுகாப்பு அதிகாரி
refusal = மறுப்பு
refuse to accept = ஏற்கமறு
refutation = மறுத்துவாதிடல்
refute = மறுத்துவாதிடு
registrar = பதிவாளர்
registration of documents = ஆவணப் பதிவு
Registry of the Federal Court – Trial Division = மத்திய நீதிமன்றப் பதிவகம் - விசாரணைப் பகுதி
Registry Office = பதிவு அலுவலகம்
regulate = ஒழுங்குபடுத்து
regulation = ஒழுங்குவிதி
reimburse = ஈடுசெய்
reinstate = மீளவமர்த்து
reject = நிராகரி
rejection = நிராகரிப்பு
rejection of a claim = கோரிக்கையை நிராகரித்தல்
release on bail = பிணையில் விடு
relevancy = இயைபுடைமை = பொருத்தம்
relevant = இயைபுடைய
remedial and disciplinary measures = பரிகார-ஒழுக்காற்று நடவடிக்கைகள்
remote evidence = சேய்மைச் சான்று
removal order = அகற்றல் கட்டளை
remove counsel = சட்டமதிஞரை அகற்று
reopen a claim = கோரிக்கையை மீண்டும் முன்வை
repatriation = தாயகத்துக்கு அனுப்பல்
repeal = நீக்கு
report on inadmissibility = அனுமதிக்கவியலாமை பற்றிய அறிக்கை
reprieve = தண்டனை நிறுத்தம்
repudiate = மறுதலி
repudiation = மறுதலிப்பு
reputation = மதிப்பு
requisition = தேவைக் கோரிக்கை
rescind = இலதாக்கு = நீக்கு
rescue = காப்பாற்று
reserved decision = ஒத்திவைத்த தீர்மானம்
resettlement = மீள்குடியமர்வு
residency obligation = வசிப்புக் கடப்பாடு
residuary estate = எஞ்சிய மரணச்சொத்து
resistance = எதிர்ப்பு
respite = இடை ஓய்வு
respondent = பதில்வாதி = எதிர்வாதி
restitution = மீட்டளிப்பு
restoration = மீள்நிலைப்படுத்தல்
restrain = தடைப்படுத்து
restrict = கட்டுறுத்து = கட்டுப்படுத்து
resume = மீளத்தொடங்கு
resume a procedure = நடைமுறையை மீண்டும் தொடரு
retain a lawyer = ஒரு சட்டவாளரை அமர்த்து
retainer = அமர்த்தற் கட்டணம்
retention money = பிடிப்பணம்
retrial = மறுவிசாரணை
retributive justice = பழிதீர்ப்பு நீதி
retrospective rule = கடந்தகாலத்திலிருந்து செல்லுபடியாகும் விதி
reunification of family members = குடும்ப உறுப்பினர்களின் மீளொருங்கிணைவு
review = மீள்நோக்கு
review of decision for detention = தடுத்துவைக்கும் தீர்மானத்தை மீள்நோக்கல்
revise = மீட்டியமை
revision = மீட்டல்
revoke = நீக்கு
reward = வெகுமதி
rider = சாருரை
right of appeal = மேன்முறையிடும் உரிமை
Right of Minister = அமைச்சரின் உரிமை
rigorous imprisonment = கடூழியச் சிறைத்தண்டனை
riot police = கலகம் அடக்கும் காவல்துறை
Rule of Law = சட்ட ஆட்சி
rules of evidence = சாட்சிய விதிகள்
safe haven = பத்திரமான புகலிடம்
safe third country = பத்திரமான மூன்றாவது நாடு
sanction = (1) இசைவாணை (2) தண்டிப்பு
sanction of the court = நீதிமன்றின் இசைவாணை
second degree murder = சடுதி வன்மக் கொலை
secular state = உலகியல் அரசு = மதச்சார்பற்ற அரசு
security grounds = பாதுகாப்புக் காரணங்கள்
security risks = பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்
seized panel = பற்றிக்கொண்ட குழாம்
self-defence = தற்காப்பு
senate = மூதவை
sentence = தண்டனைத் தீர்ப்பு
separating claims = கோரிக்கைகளைப் புறம்பாக்கல்
serious criminality = கடுங் குற்றச்செயற்பாடு
serious criminality = பாரதூரமான குற்றச்செயற்பாடு
serve summons = அழைப்பாணை சேர்ப்பி
set aside = புறந்தள்ளு
set aside a decision = முடிபை புறந்தள்ளு
seven-day review = ஏழு-நாள் மீள்நோக்கு
show cause hearing = bail hearing = காரணம் காட்டும் விசாரணை = பிணை விசாரணை
sine die = without fixing a date = காலவரையறையின்றி = திகதி குறிப்பிடாது
slander = வசைதூற்றல்
social group persecution = சமூகக் குழுமக் கொடுமை
sound mind = சித்த நலம் = உள நலம்
sponsor of the applicant = விண்ணப்பதாரியைப் பொறுப்பேற்பவர்
sponsored applicant = பொறுப்பேற்கப்பட்ட விண்ணப்பதாரி
spouse = வாழ்க்கைத் துணை
state protection = அரச பாதுகாப்பு
statement = கூற்று
statement that documents were provided = ஆவணங்கள் வழங்கிய கூற்று
statute = நியதிச்சட்டம்
statutory declaration = நியதிச்சட்டப் பிரகடனம்
stay a removal order = அகற்றல் கட்டளையை தள்ளிவை
step child = மறுதாரப் பிள்ளை
strangulation = திருகிக்கொல்லல்
student authorization = மாணவர்க்கான அனுமதி
sub judice = நீதிமன்றின் முன்னிலையில்
subpoena = அழைப்பாணை
subsidy = உதவிப்படி
substantiate = மெய்யுறுதிப்படுத்து
substantive evidence = மெய்யுறுதிச் சான்று
successor = பின்னுரிமையாளர்
sue = வழக்குத்தொடு
suicide = தற்கொலை
suit = வழக்கு
summary conviction = உடனடிக் குற்றத்தீர்ப்பு
summary conviction = குறுங் குற்றத்தீர்ப்பு
summon a witness = சாட்சிக்கு அழைப்பாணையிடு
Superior Court = மேல் நீதிமன்று
supporting evidence = துணைச் சான்று
Supreme Court = உச்ச நீதிமன்று
surcharge = மிகைக்கட்டணம்
surety = பிணையாளி
surname = குடும்பப் பெயர்
surtax = மிகைவரி
surveillance camera = கண்காணிப்பு ஒளிப்டக்கருவி
survivor = மீந்தார்
survivorship = மீந்தார் உரிமை
suspect = சந்தேகநபர்
suspend = இடைநிறுத்து
suspended sentence = இடைநிறுத்திய தண்டனைத்தீர்ப்பு
suspension or termination = இடைநிறுத்தம்(ல்) அல்லது முடிவுறுத்தம்(ல்)
suspicion = ஐயுறவு
swear = சத்தியஞ்செய்
sworn testimony = சத்திய சாட்சியம்
tainted evidence = கறைபட்ட சான்று
tamper with evidence = சான்றைத் திரிவுபடுத்து
tangible evidence = உருப்படியான சான்று
temporalities = கோயிலுடைமைகள்
temporary resident = தற்காலிக வாசி
temporary resident permit = தற்காலிக வசிப்பு அனுமதிப் பத்திரம்
temporary worker = தற்காலிக தொழிலாளர்
tenancy = வாடகைக் குடியிருப்பு
termination and cancellation = முடிவுறுத்தலும் நீக்கலும்
terms and conditions = நியதிகளும் நிபந்தனைகளும்
territorial integrity = ஆள்புலக் கட்டுறுதி
territorial waters = ஆள்புல நீர்ப்பரப்பு
territory = ஆள்புலம்
testament = மரணசாதனம்
testamentary trust = மரணசாதன நம்பிக்கைப் பொறுப்பு
testify = சாட்சியமளி
testimony = சாட்சியம்
theft = திருட்டு = களவு
third party = மூன்றாந் தரப்பு
threat = அச்சுறுத்தல்
threaten = அச்சுறுத்து
thumb impression = பெருவிரல் அடையாளம்
title = உரித்து
title deed = உரித்துறுதி
toll = ஆயம்
tort = தீங்கு
tout = ஆட்கூட்டி
trafficking in persons = human trafficking = ஆட்கடத்து வியாபாரம்
translator = மொழிபெயர்ப்பாளர்
transnational crime = நாடுகடந்து புரியும் குற்றம்
travel document = பயண ஆவணம்
treason = அரச துரோகம்
treaty = உடன்பாடு
trespass = அத்துமீறல்
triable issue = விசாரிக்கத்தக்க பிரச்சனை
trial = விளக்கம் = விசாரணை
trial judge = விளக்க நீதிபதி = விசாரிக்கும் நீதிபதி
ulterior motive = உள்நோக்கம் = உட்கிடை நோக்கம்
unambiguous = இருபொருள்படாத = தெளிவான
unconstitutional action = அரசமைப்புக்கொவ்வாத நடவடிக்கை
uncontrollable impulse = கட்டுப்படுத்தவியலாத உந்தல்
undefended accused = சட்டவாதித்துணையற்ற எதிராளி
undertaking relating to sponsorship = பொறுப்பேற்புத் தொடர்பான உறுதிமொழி
undisclosed assets = வெளிப்படுத்தாத சொத்துகள்
undue hardship = மிகுந்த இன்னல்
unequivocal = தெட்டத்தெளிவான
unilateral declaration of independence = ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம்
unimpeachable evidence = ஐயத்துக்கு இடங்கொடாத சான்று
uninterrupted possession = இடையறா உடைமை
United Nations High Commissioner for Refugees = ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையாளர்
Universal Law = உலகளாவிய சட்டம்
unjustifiable action = நியாயப்படுத்தவியலாத நடவடிக்கை
unlawful assembly = சட்டவிரோதமான கூட்டம்
unlikely to appear = தோற்றும் வாய்ப்பு இல்லை = வெளிப்படும் வாய்ப்பு இல்லை
unnatural death = இயற்கைக்கு மாறான இறப்பு = அவச்சா
unprofessional conduct = துறைமைசாரா நடத்தை
unqualified support = வரைபாடற்ற ஆதரவு
unreasonable conditions = நியாயமற்ற நிபந்தனைகள்
unsoundness of mind = சித்தநலமின்மை = சித்தசுவாதீனமின்மை
usury = கடுவட்டி
vacate determination = தீர்மானத்தை நீக்கு
vacate refugee protection = அகதிப் பாதுகாப்பை நீக்கு
vagrancy = அலைந்து திரிதல் = தெருச்சுற்றல்
vagrant = அலைந்து திரிபவர் = தெருச்சுற்றி
valid passport = செல்லுபடியான கடவுச்சீட்டு
validate = செல்லுபடியாக்கு
validity period = செல்லுபடியாகும் காலப்பகுதி
value of money = பணத்தின் பெறுமதி
vandalism = நாசவேலை
verbal agreement = வாய்மொழி உடன்படிக்கை
verbatim report = சொல்லுக்குச் சொல்லான அறிக்கை
verdict = தீர்ப்பு
verifiable facts = உறுதிசெய்யக்கூடிய நிகழ்பாடுகள்
verified by affidavit = சத்தியக்கடதாசியால் உறுதிசெய்யப்பட்ட
verify the quotation = மேற்கோளை உறுதிசெய்
vested interest = உடைமை அக்கறை
vested interests = உடைமை அக்கறை உடையோர்
veto = தடுப்பாணை
vexatious action = அலைக்கழிக்கும் வழக்கு
vice versa = மறுதலையாக
vigilance = விழிப்பு
vindicate = நிரபராதி என்பதை நிலைநிறுத்து
violate = மீறு
violate human rights = மனித உரிமைகளை மீறு
violence = வன்செயல் = வன்முறை
visa = நுழைவனுமதி
void = வெறிதான = வெற்று
voir dire = சாட்சிய ஏற்புடைமை விசாரணை
voluntary confession = மனமிசைந்த குற்றவொப்புதல்
voluntary departure = மனமிசைந்து புறப்படல் = மனமிசைந்த புறப்பாடு
voluntary manslaughter = மனமிசைந்த ஆள்வதம்
vouch = உத்தரவாதமளி
wagering contract = பந்தய ஒப்பந்தம்
waive arraignment = குற்றவினாத்தொடுப்பை தளர்த்திவிடு
waiver of arraignment = குற்றவினாத்தொடுப்பை தளர்த்திவிடுதல்
War Crimes Act = போர்க் குற்றச் சட்டம்
ward = பாதுகாவற் சிறார்
warn = எச்சரி
warrant = (1) பிடியாணை (2) எழுத்தாணை
warrant to arrest = பிடியாணை
well-founded fear of persecution = தகுந்த காரணங்களுடன் கொடுமைக்கு உள்ளாகும் அச்சம்
whipping = சவுக்கடி
widow = கணவரை இழந்தவர்
widower = மனைவியை இழந்தவர் = தாரமிழந்தவர்
wilful evasion = வேண்டுமென்றே தட்டிக்கழித்தல்
will = testament = விருப்பாவணம்
with impunity = தண்டனைப் பயமின்றி
withdraw a claim = கோரிக்கையை மீளப்பெறு
witness = சாட்சி
writ = பேராணை
written request = எழுத்துமூல வேண்டுகோள்
written submissions = எழுத்துமூல சமர்ப்பணம்
wrong = பிழை
wrongdoing = பிழைசெய்கை
wrongful conviction = தவறான குற்றத்தீர்ப்பு
young offender = இளந் தவறாளி